/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கே.எம்.சி.எச்.ல் தோல் பராமரிப்பு மறுசீரமைப்பு மையம் துவக்கம் கே.எம்.சி.எச்.ல் தோல் பராமரிப்பு மறுசீரமைப்பு மையம் துவக்கம்
கே.எம்.சி.எச்.ல் தோல் பராமரிப்பு மறுசீரமைப்பு மையம் துவக்கம்
கே.எம்.சி.எச்.ல் தோல் பராமரிப்பு மறுசீரமைப்பு மையம் துவக்கம்
கே.எம்.சி.எச்.ல் தோல் பராமரிப்பு மறுசீரமைப்பு மையம் துவக்கம்
ADDED : செப் 18, 2025 10:29 PM

மு கப்பொலிவு மற்றும் சீரான தோல் பராமரிப்புக்கென, கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், பிரத்யேக தோல் சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தோல் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு மைய தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் பவித்ரா கூறியதாவது:
பொலிவான தோல் பெறுவதும், தன்னம்பிக்கை தரும் தோற்றம் பெறுவதும் அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, இது ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. தங்களது தோற்றம் குறித்த நேர்மறையான உணர்வை இதன் வாயிலாக ஒருவர் பெற முடியும். உடல் நல பிரச்னைகளுக்கு, அழகு சிகிச்சைகள் வாயிலாக தீர்வு தேட முடியும்.
தனது தோற்றம் குறித்த பாதுகாப்பற்ற உணர்வால் எழும் பதற்றம், மன அழுத்தம் போன்றவற்றை தவிர்த்து, தன்னம்பிக்கையை பெற இச்சிகிச்சை உதவும். காஸ்மெட்டிக் துறை நாளுக்கு நாள் பல்வேறு வளர்ச்சி மற்றும் நவீன கருவிகளின் அறிமுகத்துடன் வளர்ந்து வருகிறது.
தோல் சிகிச்சையை பொறுத்தவரை அனைவருக்கும் ஒரே விதமான சிகிச்சை அளிக்க முடியாது. சிலருக்கு மாத்திரை போதுமானதாக இருக்கலாம். சிலருக்கு லேசர் சிகிச்சை தேவைப்படும். இன்னும் சிலருக்கு லேசருடன் கூடுதலாக ஹார்மோன் சார்ந்த சிகிச்சை தேவைப்படலாம்.
இதுபோன்ற அழகு சார்ந்த சிகிச்சைகளுக்காக பெரிய மருத்துவமனைகளுக்கு பலரும் செல்வதில்லை; அழகு சிகிச்சை மையங்களுக்கே செல்கின்றனர். காரணம், அங்கு காத்திருக்கும் நேரம் குறைவு. ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, கே.எம்.சி.எச்., வளாகத்தில், பிரத்யேக தோல் சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காத்திருக்கும் நேரம் குறைவாகவே இருக்கும். தனி மருந்தகம், கட்டணம் செலுத்தும் இடம், என, அனைத்தும் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புக்கு, 0422- 4323 104, 78450 38903
இவ்வாறு, அவர் கூறினார்.