ADDED : செப் 23, 2025 08:47 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி, மின்நகர் பகுதியில் சடையாத்தாள் என்பவரது வீட்டிற்குள், நேற்று, திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதனால், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர்.
இது குறித்து, பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கணபதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீட்டில், கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த 7 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர். வனப்பகுதியில் அந்த பாம்பை விட்டனர்.