/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோட்டூர், ஒடையகுளத்தில் மண் பரிசோதனை முகாம் கோட்டூர், ஒடையகுளத்தில் மண் பரிசோதனை முகாம்
கோட்டூர், ஒடையகுளத்தில் மண் பரிசோதனை முகாம்
கோட்டூர், ஒடையகுளத்தில் மண் பரிசோதனை முகாம்
கோட்டூர், ஒடையகுளத்தில் மண் பரிசோதனை முகாம்
ADDED : செப் 25, 2025 11:48 PM
ஆனைமலை,; ஆனைமலை அருகே கோட்டூரில் இன்று மண் பரிசோதனை முகாம் நடக்கிறது.
ஆனைமலை வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:
மண் பரிசோதனை செய்வதால், மண்ணில் உள்ள களர், அமிலம் மற்றும் உவர்த்தன்மையினை கண்டறிய முடியும். மண்ணில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவை அறிந்து பயிருக்கு உர வகைகளை பயன்படுத்திட வேண்டும்.
மண்ணில் உள்ள இடர்பாடுகளை களைவதற்கேற்ற வழிமுறைகளை அறிந்திட வேண்டும். ரசாயன உரங்கள், தேவைக்கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும்.
பயிர் அறுவைக்கு பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடுவதால் மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிரினை தேர்வு செய்யது அதிக மகசூல் மற்றும் லாபம் பெறலாம்.
மண் வளத்தை பாதுகாத்து சமச்சீர் உரம் இட்டு உரச் செலவினை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் மண் பரிசோதனை அவசியமாகும். இந்த மண்பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு ஏதுவாக, ஆனைமலை வட்டாரத்தில் இன்று (26ம் தேதி) முறையே கோட்டூர் மற்றும் ஒடையகுளம் கிராமங்களில் நடமாடும் மண் பரிசோதனை நிலைய பஸ் வருகிறது. மண் பரிசோதனை பணி மேற்கொண்டு ஒரு வார காலத்தில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட உள்ளது.
எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள், தங்களது தோப்புகளில் மண் மாதிரிகள் சேகரித்து ஊட்டச்சத்து பரிசோதனை செய்து ஆய்வு முடிவுகளை பெற்று அதற்கேற்ப பற்றாக்குறை உள்ள சத்துக்களை அறிந்து கொள்ளலாம். தேவைக்கேற்ப போதுமான அளவு அங்கக, ரசாயன உரங்களை பயன்படுத்திட வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.