/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம் ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்
ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்
ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்
ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 17, 2025 08:40 PM

வால்பாறை; வால்பாறை தாலுகா அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ், மக்கள் குறை தீர்க்கும் முகாம், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் நடந்தது.
முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், மொபைல்போன் எண் பதிவு உள்ளிட்ட சேவைகள் செய்யப்பட்டன.
சிவில் சப்ளை அதிகாரிகள் கூறுகையில், 'பொது விநியோகத்திட்டத்தின் கீழ், ரேஷன் பொருட்கள் பெறும் அட்டைதாரர்கள், அந்தந்த ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று பொருட்கள் வாங்க, கைரேகை பதிவு செய்ய வேண்டும்.
கார்டுதாரர் கைவிரல் ரேகை, கண் கருவிழி இயந்திரம் வாயிலாக பதிவு செய்ய கட்டாயம் குடும்பத்தில் உள்ள அனைவரும் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே, இனி ரேஷன் பொருட்கள் வழங்க முடியும்,' என்றார்.