/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 26, 2025 05:31 AM
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வட்ட மலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் குளோபல் ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோவையில் அக்., 9, 10 ஆகிய தேதிகளில் கொடிசியா வளாகத்தில் குளோபல் ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு நடக்கிறது. இது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டமலை பாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று பேசுகையில், கொடிசியா வளாகத்தில் நடக்கும் குளோபல் ஸ்டார்ட் அப் உச்சி மாநாட்டில் இந்தியாவில் இருந்து, 264 பங்கேற்பார்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில், 10 மாநிலங்களில் உள்ள அரசு துறைகளை சார்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகளவு உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஸ்டார்ட் அப் தொழில் முனைவோரை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார்.
விழாவில், கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் வரவேற்றார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்து, ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு குறித்து விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த், ஸ்டார்ட் அப் துறை தலைமை நிர்வாகி சிவராஜா ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.