/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழிலாளி -- முதலாளி இருவருக்கும் மானியம் தொழிலாளி -- முதலாளி இருவருக்கும் மானியம்
தொழிலாளி -- முதலாளி இருவருக்கும் மானியம்
தொழிலாளி -- முதலாளி இருவருக்கும் மானியம்
தொழிலாளி -- முதலாளி இருவருக்கும் மானியம்
ADDED : செப் 30, 2025 11:00 PM
கோவை; தனியார் துறையில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக மத்திய அரசு 'பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா' என்ற புதிய திட்டத்தை, அமல்படுத்தி உள்ளது.
இது குறித்து, கோவை மண்டல பி.எப்., கமிஷனர் (2) அனந்தராமன் அறிக்கை:
இந்த திட்டம், தொழிலாளி மற்றும் முதலாளி இருவரும் பலன் பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் 2027ம் ஆண்டு ஜூலை வரை பி.எப்., அலுவலகத்தில் பதிவு செய்த, ஒரு நிறுவனத்தில் முத ல் முறையாக வேலைக்கு சேரும் ஒரு தொழிலாளிக்கு, அவரது ஒரு மாத ஊதியத்திற்கு சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு இரண்டு தவணைகளாக வழங்கப்படும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும், முதலாளிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. வேலை கொடுக்கும் நிறுவனத்தின் உரிமை யாளர்களுக்கு, மாதந்தோறும் 3000 ரூபாய் இரண்டு ஆண்டுகள் வரையும், உற்பத்தி துறையில் உள்ளவர்களுக்கு நான்கு ஆண்டுகள் வரையும், மானியத் தொகை வழங்கப்படு கிறது.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


