Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிய படைப்புகளுடன் சுகுணா பம்ப்ஸ் வெற்றி பயணம்

புதிய படைப்புகளுடன் சுகுணா பம்ப்ஸ் வெற்றி பயணம்

புதிய படைப்புகளுடன் சுகுணா பம்ப்ஸ் வெற்றி பயணம்

புதிய படைப்புகளுடன் சுகுணா பம்ப்ஸ் வெற்றி பயணம்

ADDED : செப் 30, 2025 10:34 PM


Google News
Latest Tamil News
வ ளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்திற்கேற்ப தண்ணீருக்கான தேவை நமது விவசாயம், தொழிற்சாலை, மருத்துவமனைகள் போன்ற பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. இந்த தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் சுகுணா பம்புகள் மற்றும் மோட்டார்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.

1960 களில் ஜி.ராமசாமியால் கோவையில் உருவாக்கப்பட்ட சுகுணா நிறுவனம் படிப்படியாக வளர்ந்து தற்பொழுது இந்தியாவின் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பம்பு தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக தொடர்ந்து வருகிறது.

மாறிவரும் காலத்திற்கேற்ப பல புதிய தரமான தயாரிப்புக்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தற்போது, லட்சுமிநாராயணசாமி அவர்களின் சீரிய தலைமையில் சுகுணா நிறுவனங்கள் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகின்றன.

இன்று சுகுணா தயாரிப்புகள் ஆசியா, ஆப்பரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆரம்பத்தில் சிங்கிள் பேஸ் எனத் தொடங்கி அடுத்தடுத்து, 3 பேஸ், வீட்டு உபயோகம், விவசாயம், கடலோரப் பகுதிகளுக்கான பிஸ்டன் வகை, ஆழத்தில் இருந்து நீர் எடுக்க ஜெட் பம்ப், சப்மெர்சிபில் பம்புகள், சூவேஜ் பம்புகள் என வளர்ந்து இப்பொழுது 300க்கும் மேற்பட்ட பம்புகள், 200க்கும் மேற்பட்ட மோட்டார்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கம்பிரஸர் வகைகளைத் தயாரித்து வருகிறது. 1000 அடியிலிருந்து போர்வெல் கிணறுகளிலிருந்து நீரை இறைப்பதற்கு கூட இவை பயன்படுகின்றன.

சுகுணா நிறுவனம் தயாரிக்கும் 10 எச்.பி. வரையிலான சோலார் பம்புகளுக்கு கட்டிடத்துறை மற்றும் விவசாயத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் வீடுகளுக்கான சோலார் பேனல் நிறுவும் திட்டத்தின் கீழ் மானியமும் குறைந்த வட்டியில் கடனும் அளிக்கப்படுகின்றன.

தேவைப்படும் வீடுகளுக்கு சோலார் பேனல்களை நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்து அவர்களுக்கு பெரும் சேமிப்பை உருவாக்குவதுடன் மானியத்தை பெற்று தருவது வரை இந்நிறுவனம் முழுமையான சேவையை அளிக்கிறது.

சுகுணா அறக்கட்டளை, பல தரப்பட்ட மக்களுக்கும் கல்வி அளித்திட பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இன்று சுகுணா ரிப் வி மெட்ரிக்குலேஸன் பள்ளி சுகுணா இண்டர்நேஷனல் பள்ளி, சுகுணா பிப் பள்ளி மற்றும் சுகுணா வித்யா நிகேதன் பள்ளிகள் பள்ளிக் கல்வியில் தனி முத்திரை பதித்துள்ளன.

சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சுகுணா பாலிடெக்னிக் மற்றும் சுகுணா இன்ஜினியரிங் கல்லுாரிகள் இன்றைய சூழலுக்கேற்ப நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கல்வி அளிப்பதால் மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு, www.sugunapumps.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us