/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ. அமைப்பாளர் நியமனம் சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ. அமைப்பாளர் நியமனம்
சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ. அமைப்பாளர் நியமனம்
சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ. அமைப்பாளர் நியமனம்
சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ. அமைப்பாளர் நியமனம்
ADDED : அக் 21, 2025 10:02 PM
சூலுார்: சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ., வுக்கு, அமைப்பாளர், இணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பா.ஜ.வில் சட்டசபை தொகுதி வாரியாக, கட்சி பணிகளை ஒருங்கிணைக்க, அமைப்பாளர், இணை அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார்.
அதன்படி, சூலுார் சட்டசபை தொகுதிக்கு, மாநில துணைத்தலைவரான பேராசிரியர் கனகசபாபதி அமைப்பாளராகவும், இணை அமைப்பாளர்களாக, மாவட்ட பொதுச்செயலாளர் கோபால்சாமி, மோகன் மந்திராசலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை தொகுதி பொறுப்பாளராக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.


