/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குமரகுரு கல்லுாரியில் 'ஸ்வாகதம்' நிகழ்ச்சிகுமரகுரு கல்லுாரியில் 'ஸ்வாகதம்' நிகழ்ச்சி
குமரகுரு கல்லுாரியில் 'ஸ்வாகதம்' நிகழ்ச்சி
குமரகுரு கல்லுாரியில் 'ஸ்வாகதம்' நிகழ்ச்சி
குமரகுரு கல்லுாரியில் 'ஸ்வாகதம்' நிகழ்ச்சி
ADDED : ஜூலை 16, 2024 10:44 PM
கோவை;குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி, கல்லுாரி அரங்கில் நடந்தது.
குமரகுரு நிறுவனங்களின் இணைத்தாளாளர் சங்கர் வாணவராயர் தலைமை வகித்து, நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
இதில், அவர் பேசியதாவது:
கல்வி என்பது பட்டங்கள் பெறுவதுடனும், வேலைவாய்ப்பு பெற்ற பின்பும் முடிவதல்ல. வாழ்க்கை முழுவதும் கற்றல் என்பது தொடர வேண்டும். துறை மட்டுமின்றி, துறைகள் தாண்டியும் திறன்களை 'அப்டேட்' செய்துகொள்ள வேண்டும்.
கல்வி ஒருவருக்கு சிந்திக்க, எழுத, பேசுவதற்கான சுதந்திரத்தை தருகிறது. அதை பொறுப்புடன் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்வில், கல்லுாரி முதல்வர் விஜிலா எட்வின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.