/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தமிழக முதல்வரின் முகம் திருப்பூர், கோவை! திட்டங்களை துவக்கி அமைச்சர் உதயநிதி பேச்சுதமிழக முதல்வரின் முகம் திருப்பூர், கோவை! திட்டங்களை துவக்கி அமைச்சர் உதயநிதி பேச்சு
தமிழக முதல்வரின் முகம் திருப்பூர், கோவை! திட்டங்களை துவக்கி அமைச்சர் உதயநிதி பேச்சு
தமிழக முதல்வரின் முகம் திருப்பூர், கோவை! திட்டங்களை துவக்கி அமைச்சர் உதயநிதி பேச்சு
தமிழக முதல்வரின் முகம் திருப்பூர், கோவை! திட்டங்களை துவக்கி அமைச்சர் உதயநிதி பேச்சு
ADDED : பிப் 12, 2024 02:56 AM

கோவை:கோவை மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்குவதற்கான பில்லுார் மூன்றாவது திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் வரவேற்றார். அமைச்சர்கள் முத்துசாமி, நேரு முன்னிலை வகித்தனர்.
அதில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
கோவை மக்களுக்கு, தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம். அதை இன்று நிறைவேற்றியுள்ளோம். இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்கும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களுக்கும், சீராக குடிநீர் வழங்குவதற்கான பணிகளை செய்து வருகிறோம்.
மக்களின் இடப்பெயர்வால் நகரங்கள் விரிவடைந்து வருகிறது. அதற்கேற்ப சாலைகள், புதிய பாலங்கள், போக்குவரத்து வசதிகள் செய்ய வேண்டும்; குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். நகரங்களில் 2035, 2050ம் ஆண்டுகளில் என்ன மக்கள் தொகை இருக்கும் என்பதையெல்லாம் கணித்து செயலாற்றி வருகிறோம்.
வளர்ச்சி அதிகம்
கோவை நகரின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறோம். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் ஏதேனும் ஒரு நகரம் மட்டும் வளர்ந்திருக்கும். தமிழகத்தில் அப்படியல்ல; சென்னை மட்டுமின்றி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மதுரை, திருச்சி போன்ற நகரங்களும் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. கோவை மக்களிடம் கேட்டுக் கொள்வது என்னவெனில், அடுத்த இரு மாதங்கள் மிக மிக முக்கியமான காலம். உங்களுக்கே புரிந்திருக்கும். சென்ற முறை சின்ன, சின்ன தவறுகள் நடந்திருந்தாலும், அவற்றை திருத்திக் கொண்டு, அதை சரி செய்ய வேண்டும். நீங்கள் தான், தி.மு.க., அரசின் துாதுவர்கள். நீங்கள் தான், தமிழக முதல்வரின் முகம். அவரது முகமாக இருந்து, திட்டங்களை மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் நன்றி கூறினார். எம்.பி.,க்கள், மேயர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.