/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம்; இ.ம.க., ஆதரவு ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம்; இ.ம.க., ஆதரவு
ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம்; இ.ம.க., ஆதரவு
ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம்; இ.ம.க., ஆதரவு
ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம்; இ.ம.க., ஆதரவு
ADDED : ஜூன் 19, 2025 04:25 AM
கோவை, : ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசிக்க செல்லும் உள்ளூர் மக்களுக்கு, 200 ரூபாய் கட்டணம் நிர்ணயித்த, அறநிலையத்துறையை கண்டித்து, ராமேஸ்வரம் தீவு மக்கள் வியாபாரிகள் அனைத்து கட்சியினர் சார்பில் நடைபெறும், ஆலய நுழைவு போராட்டத்துக்கு, இ.ம.க., ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது.
இ.ம.க., நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை:
ராமநாதசுவாமி திருக்கோவிலில், உள்ளூர் மக்கள் கட்டணமின்றி தரிசித்து வந்தனர். தற்பொழுது அறநிலையத்துறை உள்ளூர் மக்கள், சென்று வர இருந்த பிரத்யேக வழியை, 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, கட்டண வழியாக மாற்றி விட்டனர்.
இது சம்பந்தமாக, பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும், தீர்வு காணப்படவில்லை. எனவே ஆலய நுழைவு போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, இ.ம.க., முழு ஆதரவு தெரிவிக்கிறது.
இது சம்பந்தமாக, நடைபெறும் அனைத்து ஜனநாயக அறப்போராட்டங்களிலும், இ.ம.க., தொண்டர்கள் பங்கேற்பர்.
இவ்வாறு, அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.