/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'இயற்கை - மனிதர்கள் உறவு இணக்கமாக இருக்கணும்!' 'இயற்கை - மனிதர்கள் உறவு இணக்கமாக இருக்கணும்!'
'இயற்கை - மனிதர்கள் உறவு இணக்கமாக இருக்கணும்!'
'இயற்கை - மனிதர்கள் உறவு இணக்கமாக இருக்கணும்!'
'இயற்கை - மனிதர்கள் உறவு இணக்கமாக இருக்கணும்!'
ADDED : அக் 01, 2025 11:53 PM
வால்பாறை; வால்பாறையில், திணை இயக்கம் மற்றும் ஓசை அமைப்பு சார்பில், திணையியல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கில் பங்கேற்றோர் பேசியதாவது:
தொல்காப்பியம் முதலாக சங்க இலக்கியம் வரையிலான பல கருத்துக்கள், பாடல்கள் இன்றைய சூழலில் நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, தமிழ் அறிவுத்தோற்றவியல் எப்படி இருந்தது என்றும், முதல் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை எவ்வாறு அறிவுத்தோற்றமாக உருவானது என்பது குறித்தும் இளைஞர்கள் அவசியம் அறியவேண்டும். இன்றைய சமூகம் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீர்வு தரும் கோட்பாடாக திணைக்கோட்பாடு இருக்கும்.
இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையே இணக்கமான உறவு இருந்தால் எந்த சிக்கலும் ஏற்படாது. இணக்கம் சிதையும் போது தான் சிக்கல்களும் தோன்றுகின்றன.
இவ்வாறு, பேசினர்.


