/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாணவியை தனிமைப்படுத்தி தேர்வு; பள்ளி முதல்வர், தாளாளர் சரண்மாணவியை தனிமைப்படுத்தி தேர்வு; பள்ளி முதல்வர், தாளாளர் சரண்
மாணவியை தனிமைப்படுத்தி தேர்வு; பள்ளி முதல்வர், தாளாளர் சரண்
மாணவியை தனிமைப்படுத்தி தேர்வு; பள்ளி முதல்வர், தாளாளர் சரண்
மாணவியை தனிமைப்படுத்தி தேர்வு; பள்ளி முதல்வர், தாளாளர் சரண்
ADDED : மே 20, 2025 07:12 AM

கோவை : கோவையில், பள்ளி மாணவியை தனிமைப்படுத்தி, தேர்வு எழுத வைத்த விவகாரம் தொடர்பாக, தனியார் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர், நேற்று கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை ஜாமினில் விடுவித்து, கோர்ட் உத்தரவிட்டது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், ஏப்., 7ல், முழு ஆண்டு தேர்வு நடந்தபோது, பூப்பெய்திய எட்டாம் வகுப்பு மாணவி,வகுப்பறைக்கு வெளியே, வராண்டாவில் படிக்கட்டில் அமர வைத்து, தேர்வு எழுத வைக்கப்பட்டார். இதுதொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியானது.
தாளாளர் தங்கவேல் பாண்டியன், பள்ளி முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர் மீது, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதியப்பட்டது. கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பள்ளி முதல்வர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சென்னை ஐகோர்ட்டில் மூவரும், முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர். ஜாமின் வழங்கிய ஐகோர்ட், கீழ்கோர்ட்டில் சரண்டராகி, ஜாமின் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, கோவையில் உள்ள எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில், நேற்று மூவரும் சரணடைந்து, ஜாமின் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி விவேகானந்தன், மூவரையும் ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.


