Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குழந்தைகளோடு வந்தனர் தகவல்களோடு திரும்பினர் :பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு

குழந்தைகளோடு வந்தனர் தகவல்களோடு திரும்பினர் :பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு

குழந்தைகளோடு வந்தனர் தகவல்களோடு திரும்பினர் :பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு

குழந்தைகளோடு வந்தனர் தகவல்களோடு திரும்பினர் :பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு

ADDED : ஜன 22, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
கோவை;'தினமலர்' மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து, அவிநாசிரோடு, சுகுணா கல்யாண மண்டபத்தில் நடத்திய, பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி,நேற்றுடன் நிறைவடைந்தது. குழந்தைகளுடன் வந்து, ஒவ்வொரு அரங்கிலும், பள்ளிக்கல்வி குறித்த ஏராளமான தகவல்களை பெற்றோர் அள்ளி சென்றனர்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முதல்படி, பள்ளியில் இருந்து தான் துவங்குகிறது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளிருக்கும் தனித்திறனை கண்டறிந்து, அதை வளர்த்தெடுக்கும் கூடமாக, பள்ளிகளே விளங்குகின்றன.

கொங்கு மண்டலத்தின் மிகச்சிறந்த பள்ளியில் உங்கள் குழந்தையின் கல்விப்பயணம் தொடங்க வேண்டுமென்பதற்காக, பெற்றோரின் தேடலை பூர்த்தி செய்யும் விதமாக, 'தினமலர்' நாளிதழ் சார்பில், பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வாரத்தின் இறுதிநாளில், பொழுதுபோக்கு அம்சங்களை தவிர்த்து, பொறுப்புடன் குழந்தைகளை கூடவே அழைத்து வந்து, பல்வேறு தகவல்களை பெற்றோர் தெரிந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி., என்.ஐ.ஓ.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களை, பின்பற்றும் பள்ளிகள், அரங்குகளை அமைத்து, பெற்றோருக்கான சந்தேகங்களை விளக்கின. ஒரே கூரையின் கீழ், பல்வேறு பள்ளிகள் பின்பற்றும் கற்பித்தல் நடைமுறைகள், கட்டண விபரம், எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி, நுழைவுத்தேர்வு கோச்சிங், பள்ளிகளில் உள்ள வசதிகளை தெரிந்து கொண்ட மனநிறைவோடு, அரங்கத்தை விட்டு பெற்றோர் வெளியேறினர்.

நிகழ்ச்சியில், 'பவர்டு பை ஸ்பான்சராக' நேஷனல் மாடல் குரூப் ஆப் பள்ளிகள் இருந்தது. மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளி, ஆதித்யா வித்யாஸ்ரம், சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளி, சமஸ்டி இன்டர்நேஷனல் பள்ளி ஆகியவை, நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.

கீர்த்தி, பாப்பம்பட்டி பிரிவு: என் மகளை எல். கே. ஜி., வகுப்பில் சேர்க்க உள்ளேன். அதற்காக விபரங்களை அறிந்துகொள்ள இந்நிகழ்ச்சிக்கு வந்தேன். இந்நிகழ்வில் இடம்பெற்றுள்ள பள்ளிகள் அனைத்தும் முழுமையான தகவல்களை அளித்தனர். இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ஜலாலுதீன், குனியமுத்துார்: எனது மகன் பத்தாம் வகுப்பு இந்த ஆண்டு முடிக்க உள்ளார். அதன் பின் ,டிப்ளமோ பிரிவில் சேர வேண்டுமா அல்லது பிளஸ்1 சேர வேண்டுமா என்ற குழப்பம் இருந்தது. அதை தெளிவுபடுத்த இந்நிகழ்ச்சிக்கு வந்தோம். இங்கு இடம் பெற்ற பள்ளியை சார்ந்த பிரதிநிதிகள் சிறந்த வழிகாட்டுதல்களை அளித்துள்ளனர்.

நிதாஷா, சித்தாபுதுார்: எனது பிள்ளைக்காக சிறந்த பள்ளியை தேர்வு செய்வதில் குழப்பம் இருந்தது; அதற்காக இங்கு வந்தோம். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் பொறுமையாக அனைத்து விளக்கங்களையும் அளிக்கின்றனர். மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக உள்ளது; அதே சமயம் இன்னும் அதிகமான பள்ளிகள் இடம்பெற்று இருந்தால் நன்றாக இருக்கும்.

விஜயா, ரேஸ்கோர்ஸ்: ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு விதமான கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படுகிறது. என் மகள் படிக்கும் பள்ளியை விட, வேறு பள்ளிகளில் கூடுதல் தொழில்நுட்பங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்ய, வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்தேன். பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜோதிநாதன், பீளமேடு: நான் ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர். என் பேத்தி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். அவருக்காக, மற்ற பள்ளிகளின் சிறந்த கற்றல் நடைமுறைகள் அறிய வந்தேன். ஒரே கூரையின் கீழ், 50 அரங்குகளை அமைத்து, எங்களின் தேடலை பூர்த்தி செய்த, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.

விஜய்ஆனந்த், போத்தனுார்: என் மகன் ஆறாம் வகுப்பு படிக்கிறார். மற்ற பள்ளிகளில் பின்பற்றப்படும் சிலபஸ், கல்வி தொழில்நுட்பங்களை அவனே அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உடன் அழைத்து வந்துள்ளேன். மிகவும் பயனுள்ளதாக, வழிகாட்டி நிகழ்ச்சி இருந்தது.

ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி

பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி, கடந்த 20, 21 ஆகிய இரு நாட்களாக, அவிநாசிரோடு, சுகுணா கல்யாண மண்டபத்தில் நடந்தது. 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து, இந்நிகழ்ச்சி நடத்திய, எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும், நிகழ்ச்சிக்கு, 'பவர்டு பை ஸ்பான்சராக' இருந்து ஒத்துழைத்த, நேஷனல் மாடல் பள்ளிக்கு நன்றிகள். மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளி, ஆதித்யா வித்யாஸ்ரம், சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளி, சமஸ்டி இன்டர்நேஷனல் பள்ளி ஆகியவை கோ-ஸ்பான்சராக இணைந்தமைக்கு, தினமலர் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.குழந்தைகளின் பள்ளிக்கல்விக்கான இந்நிகழ்ச்சிக்கு, முழு ஒத்துழைப்பு அளித்து, அரங்கம் அமைத்த அனைத்து பள்ளிகளுக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மேலும், பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து ஒத்துழைப்பு வழங்கிய, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்பு துறைக்கு, 'தினமலர்' நாளிதழ் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்நிகழ்ச்சியை இனிதாக்க, வருகைப்புரிந்த வாசகர்களுக்கு, நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது 'தினமலர்' நாளிதழ்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us