/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில் பயணிகளிடம் போன் பறித்த மூன்று சிறுவர்கள் கைதுரயில் பயணிகளிடம் போன் பறித்த மூன்று சிறுவர்கள் கைது
ரயில் பயணிகளிடம் போன் பறித்த மூன்று சிறுவர்கள் கைது
ரயில் பயணிகளிடம் போன் பறித்த மூன்று சிறுவர்கள் கைது
ரயில் பயணிகளிடம் போன் பறித்த மூன்று சிறுவர்கள் கைது
ADDED : பிப் 02, 2024 12:11 AM
கோவை:ஓடும் ரயிலில் பயணிகளிடம் மொபைல் போன்களை தட்டிப்பறித்த சிறுவர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை- பீளமேடு ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட தண்டவாளப் பகுதிகளில், ரயில் படிக்கெட்டில் நின்றும், அமர்ந்தும் பயணம் செய்தவர்களிடம் மொபைல் போன்களை தட்டிப்பறிப்பதாக பாதிக்கப்பட்ட பயணிகள் சிலர் கோவை ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ரயில்வே இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
அதில், சிவானந்தா காலனியை சேர்ந்த, 16 வயது சிறுவர்கள் இருவர், மற்றும், 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் பயணிகளிடம் மொபைல் போன்களை தட்டிப்பறித்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் மூன்று சிறுவர்களையும் கைது செய்து, காப்பகத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இதை தொடர்ந்து ரயில்வே போலீசார் பயணிகளிடம் படிக்கெட்டில் நின்றும், அமர்ந்தும் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினர்.


