ADDED : அக் 10, 2025 12:42 AM
அன்னுார்; அன்னுாரில் அ.மு.காலனியில் உள்ள மனவளக்கலை மன்றத்தில், இன்று (10ம் தேதி) மாலை 4:00 மணி முதல், 6:00 மணி வரை அறிமுக வகுப்பு நடைபெறுகிறது. இதில் உடல், மனம், உயிர் நலத்திற்கு ஏற்ற எளிய முறை பயிற்சிகள் கற்பிக்கப்படுகிறது.
அறிமுக வகுப்பு இலவசம். வருகை தருபவர்களின் வசதிக்கேற்ப பிற நாட்களில் பயிற்சி நேரம் ஏற்படுத்தி தரப்படும். மேலும் விவரங்களுக்கு 97899 88949 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


