/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுந்தராபுரம் சந்திப்பில் மீண்டும் சிக்னல் கலெக்டரிடம் வர்த்தகர்கள் முறையீடு சுந்தராபுரம் சந்திப்பில் மீண்டும் சிக்னல் கலெக்டரிடம் வர்த்தகர்கள் முறையீடு
சுந்தராபுரம் சந்திப்பில் மீண்டும் சிக்னல் கலெக்டரிடம் வர்த்தகர்கள் முறையீடு
சுந்தராபுரம் சந்திப்பில் மீண்டும் சிக்னல் கலெக்டரிடம் வர்த்தகர்கள் முறையீடு
சுந்தராபுரம் சந்திப்பில் மீண்டும் சிக்னல் கலெக்டரிடம் வர்த்தகர்கள் முறையீடு
ADDED : செப் 25, 2025 12:41 AM
போத்தனுார்: சுந்தராபுரம் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, இரு மாதத்துக்கு முன்'யூ டேர்ன்' முறை அமல்படுத்தப்பட்டது. வாகனங்கள் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் வாகனங்கள் நேர்வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டன. அதேவேளையில், சாரதா மில் சாலை சந்திப்பு மற்றும் சிக்னல் பகுதியில் மையத்தடுப்பு அமைக்கப்பட்டது. அதனால், வாகனங்கள் நீண்ட- துாரம் சென்று திரும்பும் நிலை நிலவுகிறது. இம்முறையை மாற்றி மீண்டும் சிக்னல் அமைக்கக்கோரி, கலெக்டரிடம் மனு கொடுத்தும் மாற்றமும் செய்யப்படவில்லை.
நேற்று சாரதா மில் சாலை முதல் காந்தி நகர் சாலை சந்திப்பு வரை, தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பு உயரப்படுத்துதல் மற்றும் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைக்க கலெக்டர் பவன்குமார் வந்தார். அவரை, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமையில் வர்த்தக நிறுவனத்தினர் சந்தித்தனர்.
அப்போது, 'நான்கு சாலை, சாரதா மில் சந்திப்புகள் அடைக்கப்பட்டதால், நடந்து செல்வோர் சாலையை கடக்க முடிவதில்லை. தற்போது இடைவெளியின்றி மையத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாப்புக்கு மக்கள் வருவதற்கு சிரமப்படுவர். மதுக்கரை மார்க்கெட் சாலை, இடையர்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர். சிக்னல் முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். சாரதா மில் சாலை சந்திப்பில் உள்ள ஸ்டாப்பை, தெற்கு நோக்கி, 100 மீட்டர் துாரம் தள்ளி அமைக்க வேண்டும்' என்றனர்.
அதற்கு, ''போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்து தீர்வு காண்பர்,'' என கலெக்டர் உறுதியளித்தார். இதே கோரிக்கை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடமும் கூறப்பட்டது.