ADDED : செப் 23, 2025 11:09 PM
கோவை; சூலுார் வியாபாரிகள் அறக்கட்டளை மற்றும் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. சூலுார் பிரிவு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
ஜி.எஸ்.டி., வரி குறைப்புக்கு நன்றியும், அமெரிக்க இறக்குமதி வரி அதிகரிப்புக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அமெரிக்க பொருட்களை விற்பனை செய்வதையும், பயன்படுத்துவதையும் நிறுத்த வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், செயலாளர் முருகேசன், துணை தலைவர்கள் செல்வராஜ், இளங்கோவன், தங்கராஜ், சசிகுமார், பொருளாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.