/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அங்கக வேளாண் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி அங்கக வேளாண் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி
அங்கக வேளாண் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி
அங்கக வேளாண் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி
அங்கக வேளாண் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : அக் 23, 2025 10:54 PM
பொள்ளாச்சி: கோவை மாவட்ட வேளாண் அறிவியல் நிலையம் (கே.வி.கே.,) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், அங்கக வேளாண்மை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. வரும் 28ம் தேதி முதல், டிச.,1ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது.
இதில், பஞ்சகவ்யா, தசகவ்யா, மீன் அமிலம், ஐந்திலைக் கரைசல், மண்புழு உரம், வேர் உட்பூசாணம் ஆகிய இடுபொருட்களை தயாரிப்பதற்கான செயல்முறை விளக்கம் அளிக்கப்படும். அங்கக வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகள், தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவுள்ளனர். களப் பயணமும் இதில் அடங்கும்.
இப்பயிற்சியில், 18 முதல் 45 வயது வரையிலான ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்கலாம். பயிற்சியின் நிறைவில் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 78128 03805, 90477 56077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது.


