ADDED : செப் 27, 2025 12:45 AM

போத்தனுார்; கோவை மாநகராட்சி சார்பில், கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுந்தராபுரம் அருகே சாரதா மில் ரோடு சந்திப்பு முதல் காந்தி நகர் சாலை சந்திப்பு வரை, மையத்தடுப்பு புதுப்பித்தல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பவன்குமார், பணியை துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றி செல்வன், கவுன்சிலர்கள் அஸ்லம் பாஷா, கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.


