ADDED : மே 19, 2025 11:53 PM
கோவை; விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கிய இருவரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை சிட்ரா பகுதியில், விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது.
அவர்கள், பீளமேடு தண்ணீர்பந்தல் குருசாமி நகரை சேர்ந்த ஜெயராஜ், 25, நேரு நகர் சபரீசன், 20 எனத் தெரிந்தது. அவர்களை சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்து மூன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


