/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பீளமேடு பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இரு ஊட்டி வாலிபர்கள் கைது பீளமேடு பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இரு ஊட்டி வாலிபர்கள் கைது
பீளமேடு பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இரு ஊட்டி வாலிபர்கள் கைது
பீளமேடு பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இரு ஊட்டி வாலிபர்கள் கைது
பீளமேடு பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இரு ஊட்டி வாலிபர்கள் கைது
ADDED : மே 12, 2025 12:27 AM
கோவை; பீளமேடு பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி, சேரன் நகரை சேர்ந்தவர் நவீன் கார்த்திக், 20; ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த, 7ம் தேதி தனது நண்பரின் பைக்கை வாங்கி கொண்டு அலுவலகம் சென்றார்.
பைக்கில் ஐ.டி., பார்க் அருகில் உள்ள, ஆவின் பூத் முன் நிறுத்திவிட்டு சென்றார். பணி முடிந்து திரும்பி வந்து பார்த்த போது, பைக் காணாமல் போயிருந்தது. அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
* கோவை பட்டணம் நடுப்பாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சவுந்தர் ராஜ், 30; டிரைவர். மே 7ம் தேதி தனது பைக்கை, பீளமேடு, ஹோப் காலேஜ் அருகில் உள்ள ஐ.டி., பார்க் அருகில் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்தபோது பைக் அங்கு இல்லை. அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில், உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி திருடனை தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், 2 பைக்குகளையும் திருடியது, ஊட்டியை சேர்ந்த ராஜ்குமார், 29, முகமது ரபீக், 30 ஆகியோர் என்பது தெரியவந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.