/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஊராட்சிகளை தரம் உயர்த்துவது கேள்விக்குறி சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஊராட்சிகளை தரம் உயர்த்துவது கேள்விக்குறி
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஊராட்சிகளை தரம் உயர்த்துவது கேள்விக்குறி
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஊராட்சிகளை தரம் உயர்த்துவது கேள்விக்குறி
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஊராட்சிகளை தரம் உயர்த்துவது கேள்விக்குறி

120 நாட்கள் முடிந்தது
கடந்த, ஜன., மாதம் பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம், என, அறிவிக்கப்பட்டது. குறித்த காலம் முடிந்து, ஐந்து மாதங்கள் முடியும் நிலையில், இத்திட்டம் தொடர்பாக தெளிவான அறிவிப்பு ஏதும் இதுவரை வரவில்லை. மேலும், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட உள்ள ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் எந்தவித புது வளர்ச்சி பணிகளையும் துவங்க வேண்டாம், என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த ஊராட்சிகளில் பணிகளை செய்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கேள்விக்குறி
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கான எந்தவொரு பூர்வாங்க பணிகளும் இதுவரை துவங்கவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இணைப்பு பணி மேற்கொண்டால், அது தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், தற்போது, இருக்கும் நிலையே நீடிக்கட்டும், என, அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.