/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திருப்பூர் மேயரிடம் கிராம மக்கள் சரமாரி புகார் திருப்பூர் மேயரிடம் கிராம மக்கள் சரமாரி புகார்
திருப்பூர் மேயரிடம் கிராம மக்கள் சரமாரி புகார்
திருப்பூர் மேயரிடம் கிராம மக்கள் சரமாரி புகார்
திருப்பூர் மேயரிடம் கிராம மக்கள் சரமாரி புகார்
ADDED : செப் 26, 2025 06:29 AM
அன்னுார்; கரியாம்பாளையம், காரேகவுண்டம் பாளையம், பிள்ளையப்பம்பாளையம் ஆகிய மூன்று ஊராட்சி மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் மண்டபத்தில் நடந்தது.
தாசில்தார் யமுனா வரவேற்றார். 500க்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தனர். முகாமில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி மேயருமான தினேஷ்குமார் பங்கேற்றார்.
அவரை சூழ்ந்து கொண்டு கிராம மக்கள் பேசுகையில்,' பிள்ளையப்பம்பாளையத்தில் சொந்த இடமும் வீடும் இல்லாத 70 பேருக்கு 2017ம் ஆண்டு இலவச வீட்டு மனை தொட்டியனுாரில் வழங்கப்பட்டது. ஆனால் எட்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எங்களுக்கு இடம் அளந்து ஒதுக்கி தரவில்லை,' என்றனர்.
மாற்றுத்திறனாளி ரங்கசாமி என்பவர் கூறுகையில் ' எனது தாயார் சேஷம்மாள் 1996ம் ஆண்டு இறந்தார். இறப்பு சான்றிதழில் கேசம்மாள் என பதிவாகி உள்ளது. இந்த எழுத்து பிழையை சரி செய்ய 25 ஆண்டுகளாக போராடி வருகிறேன்,' என்றார்.
தூய்மை பணியாளர்கள் பேசுகையில், 'ஊராட்சிகளில் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு சொந்த இடம் இல்லை. வீடும் இல்லை. பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. விரைவில் வழங்க வேண்டும்,' என்றனர்.
மேயர், உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என கிராம மக்களிடம் சமாதானம் தெரிவித்தார்.