Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடிநீர் அபிவிருத்தி பணிகள் துவக்கம் மாற்றியமைக்க குழாய்கள் வந்தாச்சு

 குடிநீர் அபிவிருத்தி பணிகள் துவக்கம் மாற்றியமைக்க குழாய்கள் வந்தாச்சு

 குடிநீர் அபிவிருத்தி பணிகள் துவக்கம் மாற்றியமைக்க குழாய்கள் வந்தாச்சு


ADDED : டிச 26, 2025 06:39 AM

Follow on Google

ADDED : டிச 26, 2025 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், தலைமை நீரேற்று நிலையம் புதுப்பித்தல் உள்ளிட்ட குடிநீர் அபிவிருத்தி பணிகள், 24.5 கோடி ரூபாய் நிதியில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, புதிய குழாய்கள் வந்துள்ளன.

பொள்ளாச்சி நகராட்சி நீரேற்று நிலையத்தை புதுப்பிக்க அரசு, 24.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து, பணிகள் கடந்த மாதம் பூமி பூஜையுடன் துவங்கியது. தற்போது, நகரில் குழாய்களை மாற்றியமைக்க புதிய குடிநீர் குழாய்கள் வந்துள்ளன.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 24.50 கோடி ரூபாய்க்கு குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.அம்பராம்பாளையத்தில் தற்போது, 14 எம்.எல்.டி., நீர் சுத்திகரிப்பு செய்வதற்கு மாற்றாக புதியதாக, 26 எம்.எல்.டி., கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில், பழைய கம்பங்களுக்கு பதிலாக, 22 கே.வி., மின் பெட்டகம் அமைக்கப்பட உள்ளது.பழைய, 75 எச்.பி., மின்மோட்டாருக்கு பதிலாக, 100 எச்.பி., மின்மோட்டார் அமைக்கப்படும். அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின் மோட்டார் கட்டடத்துக்கு பதிலாக புதிய பம்ப் அறை கட்டப்படும்.

பழுதடைந்த நிலையில் உள்ள, குடிநீர் தரைமட்ட தொட்டிக்கு பதிலாக, புதிய தரைமட்ட தொட்டி கட்டப்படும்.தலைமை நீரறேற்று நிலையத்தை சுற்றிலும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. மார்க்கெட் ரோடு புதிய நீருந்து நிலையத்தில் உள்ள கம்பங்களுக்கு பதிலாக, 22 கே.வி., மின் பெட்டகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

பழைய குடிநீர் குழாய்களுக்கு பதிலாக, புதிய குழாய் மார்க்கெட் ரோடு முதல் மகாலிங்கபுரம் வரை, ஒன்றரை கி.மீ.,க்கு பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதே போன்று மார்க்கெட் ரோடு முதல் ஜோதிநகர் வரை, இரண்டரை கி.மீ.,க்கு புதிய குழாய்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான, குழாய்கள் வந்துள்ளன. விரைவில் பணிகள் துவங்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap