ADDED : பிப் 29, 2024 11:31 PM
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையத்தில் இருசக்கர வாகனம் மோதி, ஊராட்சி குடிநீர் பணியாளர் பலியானார்.
துடியலுார் அருகே, என்.ஜி.ஜி.ஓ., காலனி, வி.கே.வி., நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 56. பிளிச்சி ஊராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றிவந்தார். இவர் நேற்று முன்தினம் மத்தம்பாளையம், விநாயகர் கோயில் அருகே உள்ள நீரேற்று நிலையத்தில் குடிநீர் விநியோகிக்கும் பணியை முடித்துக் கொண்டு, கோவை மேட்டுப்பாளையம் ரோட்டை கடக்க முயன்றார்.
அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், பழனிசாமி மீது மோதியது. படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


