/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெண்கள் கிரிக்கெட் போட்டி கோவை மாவட்ட அணி சபாஷ் பெண்கள் கிரிக்கெட் போட்டி கோவை மாவட்ட அணி சபாஷ்
பெண்கள் கிரிக்கெட் போட்டி கோவை மாவட்ட அணி சபாஷ்
பெண்கள் கிரிக்கெட் போட்டி கோவை மாவட்ட அணி சபாஷ்
பெண்கள் கிரிக்கெட் போட்டி கோவை மாவட்ட அணி சபாஷ்
ADDED : ஜூன் 19, 2025 05:10 AM

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், மாவட்டங்களுக்கு இடையேயான பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி, கோவையின் பல்வேறு இடங்களில் நடந்தது. இதில், 37 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணிகள் பங்கேற்றன. 'டாஸ்' வென்ற கோவை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, திருப்பூர் அணியினர், 36.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 72 ரன்கள் எடுத்தனர்.
எதிரணி வீராங்கனைகள் காவியா நான்கு விக்கெட்களும், ஜெய்ரூபா இரண்டு விக்கெட்களும், நடாசா ஒரு விக்கெட்டும், மதுமிதா இரண்டு விக்கெட்களும், ஸ்வேதா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய கோவை அணியினர், 18.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 73 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக வீராங்கனை சந்தியா, 31 ரன்களும், மோனிசா, 30 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.