/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அவிநாசி சாலை மேம்பால பணி எப்பதான் முடியும்? நிலம் கையகப்படுத்தாததால் பணிகளில் தொய்வுஅவிநாசி சாலை மேம்பால பணி எப்பதான் முடியும்? நிலம் கையகப்படுத்தாததால் பணிகளில் தொய்வு
அவிநாசி சாலை மேம்பால பணி எப்பதான் முடியும்? நிலம் கையகப்படுத்தாததால் பணிகளில் தொய்வு
அவிநாசி சாலை மேம்பால பணி எப்பதான் முடியும்? நிலம் கையகப்படுத்தாததால் பணிகளில் தொய்வு
அவிநாசி சாலை மேம்பால பணி எப்பதான் முடியும்? நிலம் கையகப்படுத்தாததால் பணிகளில் தொய்வு

நான்கு ஆண்டுகள்
கடந்த, 2020, நவ., 21ல் இத்திட்டத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டினார். நான்கு ஆண்டுகளுக்குள் இப்பணியை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது; இதன்படி, வரும் நவ., மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.
அமைச்சர் அறிவுறுத்தல்
அதற்கு முன்னதாக, ஆக., மாதத்துக்குள் முடிக்க, அமைச்சர் வேலு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், தேவையான நிலம் இன்னும் கையகப்படுத்திக் கொடுக்காததால், ஒப்பந்த காலத்துக்குள் மேம்பாலப் பணியை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இன்னும் துவங்கவில்லை
பன்மால் சந்திப்பை கடந்து ஏறு தளம், பி.ஆர்.எஸ்., மைதானம் அருகே ஏறுதளம் கட்டும் பணி இன்னும் துவங்கவில்லை. மேலும், மூன்று இடங்களில் சிறுபாலங்கள் புதுப்பிக்க வேண்டும்; மூன்று இடங்களில் சிறு பாலங்கள் அகலப்படுத்த வேண்டும்; ஐந்து இடங்களில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது; இதற்கான பணிகள் துவங்கவில்லை.
'பிப்.,க்குள் நிலம் கொடுப்போம்'
மாநில நெடுஞ்சாலைத்துறை நிலம் எடுப்பு பிரிவு டி.ஆர்.ஓ., ஜீவாவிடம் கேட்டதற்கு, ''நிலம் கையகப்படுத்துவது நீண்ட செயல்முறை. ஆவணங்களை சரிபார்த்து, இழப்பீடு வழங்கி, பத்திரப்பதிவு செய்ய வேண்டும். என்றாலும் கூட, நிலம் கையகப்படுத்தும் பணியில், 70 சதவீதம் முடிந்திருக்கிறது. பிப்ரவரி மாதத்துக்குள் மீதமுள்ள, 30 சதவீத நிலம் கையகப்படுத்திக் கொடுப்போம்,'' என்றார்.
பாக்கி வேலை நிறைய!
மேம்பால பணிகளில் துாண்கள் எழுப்பப்பட்டு, 'பாக்ஸ் கர்டர்' முறையில் ஓடுதளம் அமைப்பது மட்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக, நான்கு 'லாஞ்சர்' இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


