Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிய குடிநீர் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்? பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு

புதிய குடிநீர் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்? பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு

புதிய குடிநீர் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்? பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு

புதிய குடிநீர் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்? பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு

ADDED : செப் 23, 2025 09:08 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம் , ; பயன்படாமல் உள்ள புதிய குடிநீர் திட்டம், எப்போது பயன்பாட்டுக்கு வரும் என, மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில், 30க்கும் மேற்பட சிறிய கிராமங்கள் உள்ளன.

மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில், இந்த ஊராட்சி அமைந்துள்ளது. திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டம், சூலூர், குத்தாரிபாளையம், கரட்டுமேடு ஆகிய நான்கு குடிநீர் திட்டங்கள் வாயிலாக, ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வீடுகளும், மக்கள் தொகையும் அதிகம் ஆனதால், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த ஊராட்சியில், நமக்கு நாமே திட்டத்தில், ஒரு கோடியே, 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் துவங்கின. இத்திட்டத்துக்கு தண்ணீர் எடுக்க, வெள்ளிப்பாளையம் சாலையில், கருப்பராயன் கோவில் அருகே, பவானி ஆற்றில் வட்டக் கிணறு (இன்டெக் வெல்) அமைக்கப்பட்டுள்ளது.

பணிகள் முடிந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இத்திட்டம், எப்போது நடைமுறைக்கு வரும் என, பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

குடிநீர் திட்டப் பணிகள் துவங்கிய போது, 20 ஹெச்.பி., மின் மோட்டார் இயக்க, மின்சார இணைப்பு பெறப்பட்டது. ஆனால் தற்போது, அதிக அளவில் தண்ணீர் பம்பிங் செய்ய இருப்பதால், 60 ஹெச்.பி., மின்மோட்டார் பொருத்தி, மின் இணைப்பு பெறப்பட்டது.

கடந்த வாரம் வெள்ளோட்டமும் நடந்தது. தற்போது நேஷனல் நகரில் இருந்து, அரவிந்த் நகர் வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்தில் அனைத்து பணிகளும் முடிந்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

தற்போது இந்த ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது, மூன்று நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us