Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏன் தயக்கம்? குப்பை சேகரிப்பு விஷயத்தில் கவுன்சிலர்கள் 'காட்டம்'

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏன் தயக்கம்? குப்பை சேகரிப்பு விஷயத்தில் கவுன்சிலர்கள் 'காட்டம்'

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏன் தயக்கம்? குப்பை சேகரிப்பு விஷயத்தில் கவுன்சிலர்கள் 'காட்டம்'

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏன் தயக்கம்? குப்பை சேகரிப்பு விஷயத்தில் கவுன்சிலர்கள் 'காட்டம்'

ADDED : பிப் 06, 2024 01:24 AM


Google News
கோவை:மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, குப்பை பிரச்னையை கவுன்சிலர்கள் கிளற, பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன்: வெள்ளலுார் குப்பை கிடங்கால், வெள்ளலுார் மட்டுமின்றி சுந்தராபுரம் வரை சுற்றுப்பகுதியிலும் துர்நாற்றம் அதிகரித்து வருகிறது.

மா.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் ராமமூர்த்தி: குப்பை சேகரிப்பு பணிக்கென்று ஆண்டுக்கு ரூ.170 கோடியை தனியாருக்கு தருகிறோம். அப்படியிருக்க, துாய்மை உபகரணங்களுக்கு மாநகராட்சி ஏன் பணத்தை விரயம் செய்ய வேண்டும்; அவர்களே செலவு செய்யட்டும்.

உதயகுமார் (98வது வார்டு கவுன்சிலர்): குப்பை கிடங்குக்கு 'பல்க் வேஸ்ட்' வரக்கூடாது. இப்படியிருக்க, தனியார் வாகனங்களில் இருந்து மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனத்துக்கு 'பல்க் வேஸ்ட்' மாற்றப்பட்டு, இங்கு கொண்டு வரப்படுகிறது. தனியார் சரியாக குப்பை மேலாண்மை செய்வதில்லை.

அஸ்லாம் பாஷா(99): குப்பை கிடங்கால் வெள்ளலுார் பகுதியில் நிலத்தடிநீர் மஞ்சளாக மாறிவிட்டது. எத்தனை கவுன்சிலர்கள் வெள்ளலுார் குப்பை கிடங்குக்கு வந்து சென்றுள்ளீர்கள். அங்கு வந்தால்தான் எங்களது பாதிப்பு தெரியும். வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் என்ன ஆனது?

பொது சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் பேசுகையில், ''கவுன்சிலர்கள் தெரிவித்த சுகாதாரம் சார்ந்த குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

கவுன்சிலர் பாபு(22): கிழக்கு மண்டலத்தில் ஏழு வார்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன. ரோடு உள்ளிட்ட எந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. நாங்களும் தி.மு.க., பிரதிநிதிகள்தான். மக்களுக்காக பணிபுரிகிறோம். குப்பை விஷயத்தில் தனியாரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏன் தயங்குகிறீர்கள்?

பதிலளித்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,''குப்பை மேலாண்மைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலில் தரம் பிரிப்பதை மேம்படுத்த தனியார் நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளோம். துாய்மை பணியாளர்கள் தேவையான இடங்களில் அதிகரிக்கப்படுவர். வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் விஷயத்தில் அரசுதான் முடிவு எடுக்கும். குப்பை அள்ளும் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ்., கருவி பொருத்தி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்,'' என்றார்.

முற்றுகையிடுவோம்!

மாநகராட்சியை கண்டித்து கையில் குப்பையுடன் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா, ரமேஷ் ஆகியோர் மன்ற கூட்டத்துக்கு வந்திருந்தனர். பின்னர், பிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில்,''100 வார்டுகளும் குப்பை காடாக மாறிவிட்டது. மக்கள் வரிப்பணம் ரூ.170 கோடி தனியாருக்கு வழங்கப்படுகிறது. குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லையேல், மாநகராட்சியை முற்றுகையிடுவோம்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us