/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் 'ஜியா கேம்பிரிட்ஜ்' மையம் துவக்கம் ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் 'ஜியா கேம்பிரிட்ஜ்' மையம் துவக்கம்
ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் 'ஜியா கேம்பிரிட்ஜ்' மையம் துவக்கம்
ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் 'ஜியா கேம்பிரிட்ஜ்' மையம் துவக்கம்
ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் 'ஜியா கேம்பிரிட்ஜ்' மையம் துவக்கம்
ADDED : செப் 25, 2025 12:33 AM

கோ வையில் சர்வதேச தரத்திலான மழலைக் கல்வி அளிக்கும் வகையில், ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் 'ஜியாகேம்பிரிட்ஜ் ஆரம்பக்கற்றல் மையம்' துவக்கப்படவுள்ளது, என, இதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: ஜியா கேம்பிரிட்ஜ் மழலையர் மையம், குழந்தைகள் கற்றலில் வழக்கமான நடைமுறைகள் இல்லாமல், ஒரு புதிய பரிணாமத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனம், உடல் மற்றும் உணர்ச்சிகளை சமநிலையில் வளர்ப்பதே ஜியா கேம்பிரிட்ஜ் அடிப்படை மந்திரமாக கொண்டுள்ளது. குழந்தைகளிடம் நம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் ஆர்வத்தை துாண்டி அதில் வெற்றியடைய செய்வோம். உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் ஆரம்ப ஆண்டு பாடத்திட்டத்தின் படி நாங்கள் கற்றலை துவக்க உள்ளோம்.
எங்கள் பாடத்திட்டமானது உலகளாவிய தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மொழி மற்றும் எழுத்தறிவு, படைப்பின் வெளிப்பாடு, கணிதம், தனிப்பட்ட மற்றும் சமூக மேம்பாடு, உடல் வளர்ச்சி, எதிர்காலத்துக்கு குழந்தைகளை படிப்படியாக தயார்படுத்துதல் என, பல்வேறு நிலைகளாக பரவியுள்ளன. அனைத்து பெற்றோரின் நம்பிக்கையை இணைத்து, சிறந்த மழலைக்கல்வி அளிப்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.