தம்பதியை தாக்கிய மூவர் மீது வழக்கு
தம்பதியை தாக்கிய மூவர் மீது வழக்கு
தம்பதியை தாக்கிய மூவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 20, 2024 05:07 AM
விருத்தாசலம்: ஆலடி அடுத்த முத்தனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன்,28. இவர் அதேபகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் குமார் என்பவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தார். இதுசம்பந்தமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 18ம் தேதி, சுந்தரராஜன், குமாரிடம்பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த குமார், ஆதரவாளர்கள் வசந்தராஜன், வினோத்குமார் ஆகியோர் சேர்ந்து, சுந்தரராஜன் மற்றும் அவரது மனைவி பிரியாவை திட்டி, தாக்கினர்.
புகாரின் பேரில், ஆலடி போலீசார் குமார், வசந்தராஜன், வினோத்குமார் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.