/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் ஆறுகளில் வெள்ளத்தடுப்பு சுவர் அய்யப்பன் எம்.எல்.ஏ., கோரிக்கை கடலுார் ஆறுகளில் வெள்ளத்தடுப்பு சுவர் அய்யப்பன் எம்.எல்.ஏ., கோரிக்கை
கடலுார் ஆறுகளில் வெள்ளத்தடுப்பு சுவர் அய்யப்பன் எம்.எல்.ஏ., கோரிக்கை
கடலுார் ஆறுகளில் வெள்ளத்தடுப்பு சுவர் அய்யப்பன் எம்.எல்.ஏ., கோரிக்கை
கடலுார் ஆறுகளில் வெள்ளத்தடுப்பு சுவர் அய்யப்பன் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஜூன் 28, 2024 01:02 AM

கடலுார்: கடலுாரில் வெள்ள பாதிப்பை தடுக்க, ஆறுகளில் தடுப்பச்சவர் அமைக்க வேண்டும் என, சட்டசபையில் அய்யப்பன் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது:
ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிற்கு முன்னோடியாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். மகளிருக்கான கட்டணமில்லா பஸ் பயணம், மதுரை, கோவை, சென்னையில் மெட்ரோ ரயில் திட்டங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் தொடர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு சிறப்பு சலுகை என, போக்குவரத்து துறை மூலம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார். தமிழகத்தில் பல்வேறு நிதி நெருக்கடி இருந்துவரும் நிலையில் பஸ் கட்டணங்கள் உயத்தப்படவில்லை.
கடலுார் பகுதியில் கண்மாய்கள், கல்வாய்கள் இல்லை. பெண்ணையாறு, கெடிலம் மற்றும் மலட்டாறு ஆகிய 3 ஆறுகள் மூலம், மழை காலங்களில் வெள்ள நீர் கடலில் கலக்கிறது. ஆறுகளில் வெள்ளம் வரும்போது, உடைப்புகள் ஏற்பட்டு, ஆற்றையொட்டிய பகுதிகளில் சேதங்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதற்காக ஆறுகளில் தடுப்புச்சுவர் அமைத்து கொடுத்தால், தொடர்ந்து பேரிழப்பிலிருந்து காப்பாற்ற கூடிய நிலை உருவாக்க முடியும். கடலுாரில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.