/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பல்லுயிர் பாதுகாப்பு மேலாண்மைக் கூட்டம் பல்லுயிர் பாதுகாப்பு மேலாண்மைக் கூட்டம்
பல்லுயிர் பாதுகாப்பு மேலாண்மைக் கூட்டம்
பல்லுயிர் பாதுகாப்பு மேலாண்மைக் கூட்டம்
பல்லுயிர் பாதுகாப்பு மேலாண்மைக் கூட்டம்
ADDED : ஜூலை 20, 2024 05:17 AM

புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை ஊராட்சியில், பல்லுயிர் பாதுகாப்பு மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் அஞ்சலி ஞானதேசிங்கு தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை துணை வட்டார வளரச்சி அலுவலர் தவுலத்பானு முன்னிலை வகித்தார். இதில் முனியனார், பொன்னியம்மன் கோவிலுக்கு சொந்தமான வனத்தை கோவில் நிர்வாகமே பராமரிப்பது எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
சிதம்பரம் வனச்சரகர் வசந்த பாஸ்கர், வனவர் பன்னீர்செல்வம், வன காப்பாளர் ஞானசேகரன், கோவில் நிர்வாகிகள் ரங்கநாதன், கோதண்டராமன், தனகோபால், சம்பத், கோதண்டராமன், முத்துக்கிருஷ்ணன், முடிவண்ணன், ஜெயராமன் மற்றும் பல்லுயிர் மேலாண்மைக்குழுவினர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் மதியழகன் நன்றி கூறினார்.