/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காங்., ஐம்பெரும் விழா ஏழைகளுக்கு உதவி வழங்கல் காங்., ஐம்பெரும் விழா ஏழைகளுக்கு உதவி வழங்கல்
காங்., ஐம்பெரும் விழா ஏழைகளுக்கு உதவி வழங்கல்
காங்., ஐம்பெரும் விழா ஏழைகளுக்கு உதவி வழங்கல்
காங்., ஐம்பெரும் விழா ஏழைகளுக்கு உதவி வழங்கல்
ADDED : ஜூலை 14, 2024 04:23 AM

கடலுார் : கடலுார் மாவட்ட காங்., சார்பில் நடந்த ஐம்பெரும் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.
கடலுார் மத்திய மாவட்ட காங்., சார்பில் காமராஜர், கக்கன், ராகுல், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், கடலுார் எம்.பி., விஷ்ண பிரசாத் ஆகியோர்களது பிறந்த நாளை ஐம்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கி கேக் வெட்டி, ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கினார்.
வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், ஓ.பி.சி., அணி மாநில பொதுச் செயலாளர் ராமராஜ், உமாபதி, சிறுபான்மை பிரிவு, மாவட்டத் தலைவர் ரஹீம், வட்டாரத் தலைவர் தரணிதரன், பண்ருட்டி தொகுதி தலைவர் கராத்தே, வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வட்டார துணைத் தலைவர் அன்பழகன், ராஜாராமன், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ஏழுமலை ஆறுமுகம் மாவட்ட துணைத் தலைவர் பாண்டுரங்கன், ஐ.என்.டி.சி., மாவட்டத் தலைவர் குமார், மகளிரணி மகாலட்சுமி, வசுந்தராணி, சிறுபான்மை பிரிவு அப்துல் கப், கோபி விக்னேஷ், மணி, ஜெயபால் மற்றும் சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர் புவனகிரி மோகன்தாஸ் கலந்து கொண்டனர்.