ADDED : ஜூலை 13, 2024 04:45 PM
பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில், புகார் செய்துள்ளார்.
பரங்கிப்பேட்டை அடுத்த சில்லாங்குப்பத்தை சேர்ந்தவர் வேம்பு, 38; இவரது, மகள் ரம்யா, 18; சிதம்பரத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி, எனக்கு நிறைய படிக்க ஆசை உள்ளது, ஆனால், நீங்கள் என்னை படிக்க வைக்கமாட்டீர்கள் என கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து, வேம்பு கொடுத்த புகாரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.