ADDED : ஜூன் 16, 2024 06:28 AM

நடுவீரப்பட்டு: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், சி.என்.பாளையத்தில் பழுதடைந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இது, மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது.
இதே நிலை நீடித்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து தினமலர் நாளிதழில் சுட்டிக்காட்டி செய்தி வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் கடலுார் ஒன்றிய அதிகாரிகள் நேற்று பழுதடைந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டியை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தினர்.
இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். புதிய டேங்க் கட்டும் வரையில், பொதுமக்களுக்கு மோட்டார் மூலம் நேரடியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.