ADDED : ஜூன் 16, 2024 06:21 AM

விருத்தாசலம்: நெல்லையில் மா.கம்யூ., அலுவலகம் சூறையாடப்பட்டதை கண்டித்து, விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன், சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் வழக்கறிஞர் குமரகுரு, வட்டக்குழு பெரியசாமி, செல்வகுமார், செந்தில், மாதர் சங்கம் விமலா, கவிதா உட்பட பலர் பங்கேற்றனர். அதில், மா.கம்யூ., கட்சி அலுவலகத்தை சூறையாடிய மர்ம கும்பலை கைது செய்யக் கோரி கோஷமிடப்பட்டது.