/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல் மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 20, 2024 05:12 AM

கடலுார்: கடலுார் மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர்-பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடலுார் மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடலுார் இந்திய உணவு கழக தமிழக ஆலோசனைக்குழு உறுப்பினரும், பா.ஜ., மாநில கூட்டுறவு சங்க செயலாளருமான துரை தாமரைக்கண்ணன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கினார்.
அப்போது, தலைமை ஆசிரியர் குணசேகர் உடனிருந்தார்.