Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணாடத்தில் கனமழை மரக்கிளைகள் விழுந்து வீடு சேதம்

பெண்ணாடத்தில் கனமழை மரக்கிளைகள் விழுந்து வீடு சேதம்

பெண்ணாடத்தில் கனமழை மரக்கிளைகள் விழுந்து வீடு சேதம்

பெண்ணாடத்தில் கனமழை மரக்கிளைகள் விழுந்து வீடு சேதம்

ADDED : ஜூலை 14, 2024 03:43 AM


Google News
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரக்கிளை முறிந்து விழுந்து ஓட்டு வீடு சேதமடைந்தது.

பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் பெண்ணாடம் கடைவீதி, பிரளயகாலேஸ்வரர் கோவில் வளாகம், மேட்டுத்தெரு, கிழக்குரத வீதி பகுதியில் மழைநீர் வெள்ளம்போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பாதித்தனர். வாகனங்களும் பழுதானது. மேலும், பெண்ணாடம், அம்பேத்கர் நகரில் வெலிங்டன் பாசன வாய்க்கால் அருகே உள்ள மரத்தில் கிளை முறிந்து விழுந்ததில் அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது ஓட்டு வீடு சேதமானது.

சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு, மக்கள் அவதியடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us