/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரத்தில் என்.சி.சி., முகாம் துவக்கம் சிதம்பரத்தில் என்.சி.சி., முகாம் துவக்கம்
சிதம்பரத்தில் என்.சி.சி., முகாம் துவக்கம்
சிதம்பரத்தில் என்.சி.சி., முகாம் துவக்கம்
சிதம்பரத்தில் என்.சி.சி., முகாம் துவக்கம்
ADDED : ஜூலை 20, 2024 05:04 AM
சிதம்பரம்: சிதம்பரம், அண்ணாமலை நகரில், வருடாந்திர என்.சி.சி., 10 நாள் முகாம் துவங்கியது.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் தமிழ்நாடு 4 வது கூட்டு தொழில்நுட்ப கம்பெனி சார்பில் வருடாந்திர கூட்டு பயிற்சி முகாம் கடந்த 18ம் தேதி துவங்கியது. 27ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் முகாமின், கட்டுப்பாட்டு அதிகாரியாக கர்னல் வாசுதேவன் நாராயணன், சேனா மெடல், துணை கட்டுப்பாட்டு அதிகாரியாக புதுச்சேரி முதலாவது கடற்படை லெப்டினண்ட் கமாண்டர் லோகேஷ் கண்காணித்து வருகின்றனர்.
இம்முகாமில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், அணி நடைபயிற்சி, வரைபட பயிற்சி, கூடாரம் அமைத்தல், ராணுவ தடை ஓட்டம், துாரம் அறிதல் மற்றும் துப்பாக்கி சுடுதல் கட்டளை பயிற்சி போன்ற ராணுவம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, செய்முறை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில், கடலுார், விழுப்புரம், அரியலுார் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லுாரி பயிலும் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள் ளனர்.
கல்லுாரி மற்றும் பள்ளி என்.சி.சி., அதிகாரிகள் கேப்டன் ரவிச்சந்திரன் லெப்டினண்ட் பாலமுரளி, முதல் நிலை அதிகாரிகள் ரத்தினமணி, ராஜசேகர், ராஜா, அனிதா, இரண்டாம் நிலை அதிகாரிகள் ஞானசேகரன், திருவரசமூர்த்தி, உதயசங்கர், கார்த்திக் மற்றும் சுபேதார் பினுஸ், மதுரை வீரன் உள்ளிட்டோர் மாணவர்களை வழி நடத்தி, பயிற்சி அளித்து வருகின்றனர்.