ADDED : ஜூன் 16, 2024 06:15 AM
கிள்ளை: சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நேற்று வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில், வழக்கறிஞர் கவுதமன் படுகொலையில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வலியுறுத்தியும், சிதம்பரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில், சி.முட்லூரில் உள்ள சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.