ADDED : ஜூன் 26, 2024 02:35 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் நீதிமன்ற வாசலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு முற்றிலும் மாற்றுவதை கண்டித்து, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மூத்த வழக்கறிஞர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் பூமாலை குமாரசாமி, விஜயகுமார், செல்வபாரதி முன்னிலை வகித்தனர்.
அதில், ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்.
நிர்வாகிகள் குமரகுரு, வீரப்பன், ராஜ்மோகன், குபேரமணி, வழக்கறிஞர்கள் அருள்குமார், புஷ்பதேவன், கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், ரவிச்சந்திரன், சுரேஷ்குமார், செந்தில், மோகன், ஜென்னி, காயத்ரி, பத்மப்ரியா உட்பட பலர் பங்கேற்றனர்.