ADDED : ஜூலை 18, 2024 08:34 AM

கடலுார், : பா.ம.க, நிறுவனர் ராமதாஸ் 85வது பிறந்த நாளையொட்டி, பசுமைத்தாயகம், பிம்ஸ் மருத்துவமனை, ஸ்ரீஸ்வஸ்திக் சிட்பண்ட்ஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் வடக்குத்தில் நடந்தது.
ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, ரோட்டரி சங்க தலைவர் சண்முகவேல், ஒன்றிய குழு உறுப்பினர் கஸ்துாரி செல்வகுமார், ஊராட்சி உறுப்பினர் நளினி சண்முகவேல் முன்னிலை வகித்தனர். கடலுார் பா.ம.க., வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் முகாமை துவக்கி வைத்தார்.
வன்னியர் சங்க தலைவர் ராஜேந்திரன், இளைஞரணி தலைவர் பாலகுரு, ஒன்றிய குழு உறுப்பினர் மாலினி சண்முகவேல், ரோட்டரி உதவி ஆளுநர்கள் வெங்கடேசன், ரவிசேகர், மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், பகுதி செயலாளர் அறிவழகன் சமூக முன்னேற்ற சங்க தனசேகரன், சுந்தரபாண்டியன் குத்து விளக்கேற்றினர்.
இளைஞர் சங்க துணைத் தலைவர் மாயகிருஷ்ணன், பிரபாகரன், வடிவழகன். ஒன்றிய செயலாளர்கள் மணிவாசகம், சக்திவேல், செல்வகுமார், வடக்குத்து நகர செயலாளர் குணசேகரன், திராவிடன், ஒன்றிய தலைவர் அருணகிரி, ஒன்றிய அமைப்பு செயலாளர் கனேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட துணை செயலாளர் சண்முகவேல் நன்றி கூறினார்.