/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போலீஸ் ஆசியுடன் சரக்கு விற்பனை 'ஜோர்' போலீஸ் ஆசியுடன் சரக்கு விற்பனை 'ஜோர்'
போலீஸ் ஆசியுடன் சரக்கு விற்பனை 'ஜோர்'
போலீஸ் ஆசியுடன் சரக்கு விற்பனை 'ஜோர்'
போலீஸ் ஆசியுடன் சரக்கு விற்பனை 'ஜோர்'
ADDED : ஜூலை 17, 2024 12:48 AM
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி சப் டிவிஷனில் உள்ள ஒரு காவல் நிலையத்தில், இரண்டு போலீசாருக்கு வெளி டியூட்டி எதுவும் போடக்கூடாது என, உயர் அதிகாரி வாய்மொழி உத்தரவாம். அப்பகுதியில் மணல் கடத்தல், பிளாக்கில் சரக்கு விற்பது உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களும், வசூலில் கறாராக இருந்து, சம்மந்தப்பட் அதிகாரிகளின் நற்பெயரை பெற்று வருகின்றனர் என, சக போலீசாரே புலம்புகின்றனர்.
அந்த காவல்நிலையத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் பிளாக்கில் சரக்கு விற்பதை சந்துக்கடை என கூறப்படுகிறது. சந்துக்கடையில் 145ரூபாய் குவார்ட்டர் 200ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதிக விலை குறித்து குடிமகன்கள் கேள்வி எழுப்பினால், மாதம்தோறும் ஸ்டேஷனுக்கு கப்பம் கட்டுவதற்கு நாங்கள் எங்கே போவோம் என, வெளிப்படையாகவே கூறுகின்றனராம்.
அப்பகுதியில் போலீஸ் ஆசியுடன் இரண்டு, மூன்று சந்துக்கடைகள் இயங்கிவந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு பிறகு, ஒரே ஒரு கடை மட்டும் இயங்குகிறது. அதனால் விற்பனை தினமும் பிசியாக நடக்கிறதாம்.