/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நன்றி தெரிவிப்பு கூட்டம் அமைச்சர் அழைப்பு நன்றி தெரிவிப்பு கூட்டம் அமைச்சர் அழைப்பு
நன்றி தெரிவிப்பு கூட்டம் அமைச்சர் அழைப்பு
நன்றி தெரிவிப்பு கூட்டம் அமைச்சர் அழைப்பு
நன்றி தெரிவிப்பு கூட்டம் அமைச்சர் அழைப்பு
ADDED : ஜூன் 16, 2024 06:29 AM

சிறுபாக்கம்: கடலுார் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாரும், அமைச்சருமான கணேசன் அறிக்கை:
கடலுார் லோக்சபா தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்., விஷ்ணு பிரசாத்துக்கு ஓட்டுபோட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி சட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடக்கிறது.
அதன்படி, 17ம் தேதி காலை 9:30 மணிக்கு, திட்டக்குடி ராமலிங்கம் அஞ்சுகம் திருமண மண்டபம், பகல் 11:00 மணிக்கு விருத்தாசலம் சபிதா திருமண மகால், 1:00 மணிக்கு, நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் உள்ள சின்னதுரை திருமண மண்டபத்தில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடக்கிறது. இதில், இண்டியா கூட்டணி சார்பில் வெற்றிக்கு உழைத்த அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமைக்கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.