ADDED : ஜூலை 17, 2024 12:52 AM
திட்டக்குடி, : திட்டக்குடி அடுத்த ஆ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்,80. இவர், நேற்று முன்தினம் அதிகாலை 4:30 மணியளவில் இடைச்செருவாய் தனியார் திருமண மண்டபம் முன்பு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெருமாள் இறந்தார்.
திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.