ADDED : ஜூன் 26, 2024 03:10 AM

கடலுார் : மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
ரெட்டிச்சாவடி அடுத்த செல்லஞ்சேரியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் அழகப்பன் (எ) சாரதி,22; இவர், வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தார். வேலைக்கு செல்லுமாறு தாய் மலர்கொடி கண்டித்தார்.
இதனால், மனமுடைந்த அழகப்பன் கடந்த 17ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மலர்கொடி அளித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.