/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இரண்டு ஏக்கர் சவுக்கு மரம் தீயில் எரிந்து சேதம் இரண்டு ஏக்கர் சவுக்கு மரம் தீயில் எரிந்து சேதம்
இரண்டு ஏக்கர் சவுக்கு மரம் தீயில் எரிந்து சேதம்
இரண்டு ஏக்கர் சவுக்கு மரம் தீயில் எரிந்து சேதம்
இரண்டு ஏக்கர் சவுக்கு மரம் தீயில் எரிந்து சேதம்
ADDED : ஜூன் 27, 2024 03:12 AM
பண்ருட்டி: பண்ருட்டி அருகே தீ பிடித்து இரண்டு ஏக்கரின் பயிர் செய்திருந்த சவுக்கு மரங்கள் எரிந்து சேதமடைந்தது.
பண்ருட்டி அடுத்த திருவாமூர் ஊராட்சி காமாட்சிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்.
இவர் 2 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு பயிர் சகுபடி செய்திருந்தார். 2 ஆண்டுகளான சவுக்கு மரங்கள் வளர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள வயலில் சவுக்கு தழைகளை எரித்துள்ளனர். அந்த நெருப்பு காற்றின் வேகத்தில் பிரகாஷ் வயலில் உள்ள சவுக்கு மரத்தில் தீபரவி காற்றின் வேகத்தில் 2 ஏக்கரில் சவுக்கு மரங்களை மள மளவேன தீப்பிடித்து எரிந்து சேதமானது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.
பிரகாஷ் புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.