/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போர்வெல் செட் இரும்புகளை திருடிய இருவர் கைது போர்வெல் செட் இரும்புகளை திருடிய இருவர் கைது
போர்வெல் செட் இரும்புகளை திருடிய இருவர் கைது
போர்வெல் செட் இரும்புகளை திருடிய இருவர் கைது
போர்வெல் செட் இரும்புகளை திருடிய இருவர் கைது
ADDED : ஜூன் 15, 2024 06:11 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர்பாழ்வாய்க்காலில் வெங்கடேசன் வயல்வெளி களத்துமேட்டில் இருந்த போர்வெல் செட் இரும்புகளை நள்ளிரவு 1.00 மணியளவில் மர்ம நபர்கள் இருவர் திருடியுள்ளனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு திருடிய இருவரையும் துரத்தி பிடித்து போலீசாரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து ஒப்படைத்தனர்.விசாரணையில் அள்ளூர் காலனியை சேர்ந்த வீரமணி மகன் வெற்றிச்செல்வன், 23; கனகராஜ் மகன் கலைமணி,21; ஆகியோர் போர்வெல் செட்டில் உள்ள 40 கிலோ எடையுள்ள இரும்புகளை திருடியது போலீசாருக்கு தெரியவந்தது.
இது குறித்து போர்வெல் செட் உரிமையாளர் பரதுாரைச் சேர்ந்த மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் வழக்குப்பதிந்து வெற்றிச்செல்வன், கலைமணி ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.